தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ நடிகர் அஜித்துக்கு உதயநிதி திடீர் வாழ்த்து

நடிகர் அஜித்துக்கு உதயநிதி திடீர் வாழ்த்து

நடிகர் அஜித்துக்கு உதயநிதி திடீர் வாழ்த்து


ADDED : அக் 31, 2024 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 31, 2024 05:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை : த.வெ.க.,வின் முதல் மாநாடும், அக்கட்சி தலைவர் விஜய்யின் தி.மு.க., எதிர்ப்பு பேச்சும், அரசியல் வட்டாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய சூழலில், நடிகர் அஜித்துக்கு, துணை முதல்வர் உதயநிதி திடீர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உதயநிதி அறிக்கை:


உலக அளவில் சிறப்புக்குரிய, '24 ெஹச் துபாய் 2025 மற்றும் தி யூரோப்பியன் 24 ெஹச் சீரீஸ் சாம்பியன்ஷிப்' கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகரும், நண்பருமான அஜித்குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தமிழக விளையாட்டு ஆணையத்தின் லோகோவை, அஜித்குமார் ரேசிங் யூனிட்டின் கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளதை அறிந்து, மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம்.

இதன் வாயிலாக, தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித்துக்கு, தமிழக விளையாட்டுத் துறை சார்பாக எங்களது நன்றி.

மேலும், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள், 'பார்முலா 4' மற்றும் சென்னை ரேசிங் ஸ்ட்ரீட் சர்கியூட் போன்ற முன்னெடுப்புகளை வாழ்த்திய அஜித்துக்கு எங்கள் அன்பு நன்றி.

விளையாட்டுத் துறையில் தமிழகத்தை உலக அரங்கில் உயர்த்த ஒன்றிணைந்து செயல்படுவோம். கார் பந்தய போட்டியில் வென்று, தமிழகத்திற்கு நீங்கள் பெருமை சேர்க்க வாழ்த்துகள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us