தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கணக்கில் வராத ரூ.1.14 கோடி பறிமுதல்

கணக்கில் வராத ரூ.1.14 கோடி பறிமுதல்

கணக்கில் வராத ரூ.1.14 கோடி பறிமுதல்


ADDED : நவ 21, 2026 12:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 21, 2026 12:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பந்தலூர்: நேற்று முன்தினம் மாலை வயநாடு நாய்க்கட்டி பகுதியைச் சேர்ந்த முகம்மது ஷெரீப், 39, தமிழக எல்லைப் பகுதியான சேரம்பாடி வழியாக காரில் சென்றுள்ளார். சோலாடி சோதனை சாவடியை ஒட்டிய பகுதியில் சென்றபோது, மற்றொரு காரில் வந்த கும்பல், மோதலை ஏற்படுத்தி இந்த காரை நிறுத்தி உள்ளனர். ஷெரீப்பை கடத்திய அந்த கும்பல், காரில் இருந்த 45 லட்ச ரூபாயை பறித்துச்சென்றது.

விபத்து ஏற்படுத்திய பின்னர் கார் வேகமாக செல்வதை பார்த்த சோதனைச்சாவடி போலீசார், அதை துரத்தி சென்றனர். சற்று தொலைவுக்கு சென்றதும் தன்னை இறக்கி விட்டு, காரில் வந்த கும்பல் பணத்துடன் தப்பிச் சென்று விட்டதாக, துரத்தி வந்த போலீசாரிடம் ஷெரீப் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய சேரம்பாடி போலீஸ், வழக்கு பதிவு செய்து கடத்தல் கும்பலை பிடிக்க, 3 தனிப்படைகள் விசாரணை மேற்கொண்டனர். விபத்து ஏற்படுத்திய மற்றும் ஷெரீப் பயணித்த காரை பறிமுதல் செய்தனர்.

ஷெரீப் மற்றும் கார் உரிமையாளர் கபீர், 36, ஆகியோரிடம் எஸ்.பி. பிருந்தா, டி.எஸ்.பி. சுந்தரேசன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஷெரீப் பயணித்த காரில் ரகசிய அறை அமைத்து அதில் பணத்தை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. காரின் அடிப்பகுதியை உடைத்து பார்த்தபோது, 1.14 கோடி ரூபாய் இருந்துள்ளது.

இவர்கள் இருவரும் கேரளாவில் தங்கத்தை வாங்கி, கர்நாடக மாநிலத்தில் விற்பனை செய்வதாகவும் அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு மீண்டும் தங்கம் வாங்க சென்ற போது ஒரு கும்பல் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர். பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அதனை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஷெரீப் மற்றும் கபீரை ஜாமினில் விடுவித்ததுடன், தப்பிய கும்பலை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us