அங்கீகாரமற்ற குடியிருப்புகளுக்கும் கட்டட விதிகளில் சலுகை உண்டு
அங்கீகாரமற்ற குடியிருப்புகளுக்கும் கட்டட விதிகளில் சலுகை உண்டு
ADDED : ஏப் 10, 2026 02:03 AM
சென்னை: அங்கீகாரமில்லாத குடியிருப்புகளுக்கு, கட்டட விதிகளில் சலுகை கிடைக்கும் வகையில், போக்குவரத்து வழித்தட எல்லை வரையறையை, மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது .
மெட்ரோ, மேம்பால ரயில், புல்லட் ரயில் போன்ற போக்குவரத்து திட்டங்கள், தற்போது பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்படுகின்றன .
ஊக்குவிப்பு இத்திட்டங்களின் வழித்தடங்களில், கட்டடங் களுக்கு கூடுதல் சலுகை வழங்க, மத்திய, மாநில அரசுகள் நடவ டிக்கை எடுத்து வருகின்றன .
தமிழகத்தில் மெட்ரோ ரயில், மேம்பால ரயில், புறநகர் மின்சார ரயில், நெடுஞ்சாலை ஆகியவற்றை ஒட்டிய பகுதிகளில், அதிகமாக மக்கள் குடியேறுவதை ஊக்குவிக்க, அரசு முடிவு செய்தது.
எனவே, இந்த வழித்தடங்களை ஒட்டிய பகுதி களில், புதிய கட்டடங்களில் கூடுதல் தளங்கள் கட்ட அனுமதிப்பது குறித்து, பரிசீலித்து வருகிறது.
சலுகை இதற்காக புதிய பொது போக்குவரத்து வசதியை ஒட்டி, 500 மீட்டர் சுற்றளவுக்கு உட்பட்ட பகுதிகளை, போக்குவரத்து சார்ந்த வழித்தடம் என, வகைப்படுத்த வேண்டும்.
தற்போது, புதிய போக்குவரத்து வசதியை ஒட்டிய, முறையாக அங்கீகரிக்கப்பட்ட மனைகள், கட்டடங்கள் மட்டுமே இந்த வரம்புக்குள் வரும். இந்த விதிகளை, மத்திய அரசு தற்போது திருத்தி அமைத்துள்ளது.
இதன்படி, புதிய போக்குவரத்து வசதிகளை ஒட்டி, குறைவான வீடுகள் உள்ள பகுதிகள், அங்கீகாரமில்லாத குடியிருப்புகள் ஆகியவற்றுக்கும், போக்குவரத்து சார்ந்த வழித்தடம் என்ற வரையறை பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.
இதனால், உயரடுக்கு கட்டடங்கள் போன்று, சாதாரண மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கும், கட்டட விதிகளில் சலுகை கிடைக்க வழி ஏற்பட்டுள்ளதாக, நகரமைப்பு வல்லுநர்கள் தெரிவித்தனர்.
