'ஸ்டாலின் சம்மதித்தால் தி.மு.க.,வுடன் கூட்டணி' சொல்கிறார் மத்திய அமைச்சர் வி.கே., சிங்
'ஸ்டாலின் சம்மதித்தால் தி.மு.க.,வுடன் கூட்டணி' சொல்கிறார் மத்திய அமைச்சர் வி.கே., சிங்
ADDED : மார் 03, 2024 05:59 AM

நாகர்கோவில் : ''ஸ்டாலின் ஒப்புக் கொண்டால் தி.மு.க.,வுடன் கூட கூட்டணி வைப்போம்,'' என்று மத்திய அமைச்சர் வி.கே. சிங் கூறினார்.
நாகர்கோவிலில் அவர் கூறியதாவது:
லோக்சபா தேர்தலுக்கு முன்னோடியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் கட்சியின் நிர்வாகிகளை சந்திக்கிறேன். தேர்தல் தோல்வி பயத்தில் பிரதமர் மோடி உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஸ்டாலினுக்கு உள்ள தேர்தல் பயத்தில்தான் அவர் இவ்வாறு பேசி வருகிறார். தமிழகத்தில் தி.மு.க., குடும்ப அரசியல் நடத்தி வருகிறது .
மக்கள் நலனை கருத்தில் கொண்டு, எந்த கட்சி வந்தாலும் கூட்டணியில் இணைத்துக் கொள்ள பா.ஜ., தயாராக உள்ளது. அதில் தி.மு.க., -அ.தி.மு.க. என்ற வேறுபாடு எதுவும் கிடையாது. தி.மு.க.,வுடன் கூட்டணி என்றால், ஸ்டாலின் ஒப்புக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மத்திய அரசு செய்துள்ளது. ஆனால், மாநில அரசு அவற்றை தாங்கள் செய்தது போன்ற போலியான தோற்றத்தை உருவாக்கி வருகிறது. தகவல் தொழில்நுட்ப துறையில் இந்தியா நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளது. பேரிடர் நிவாரண நிதி அதற்குரிய வழிமுறையில் எல்லா மாநிலங்களுக்கும் வழங்குவது போல தமிழக அரசுக்கும் வழங்கப்படுகிறது என்றார்.

