ADDED : மார் 12, 2024 02:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: உத்தரபிரதேசம் மாநிலம், அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு பாதயாத்திரையாக சென்ற பெண் துறவி ஷிப்ரா பதக், 38, உடன் வந்த சகோதரர், கார் கண்ணாடி உடைக்கப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
பரமக்குடி பகுதியில் அவர் வந்த போது, சிலர் ஸ்ரீராமருக்கு எதிராக கோஷமிட்டு, ராமர் படக்கொடியை கிழித்து, சகோதரர் வந்த கார் கண்ணாடியை உடைத்ததாக ஷிப்ரா பதக் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், டி.எஸ்.பி., நிரேஸ் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், ஷிப்ரா பதக் அளித்த புகாரில் உண்மை இல்லை என, போலீசார் தெரிவித்துள்ளனர்.---------

