தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஜி.பி.எப்., கணக்கு விபரம்: 'ஆன்லைனில்' பதிவேற்றம்

 ஜி.பி.எப்., கணக்கு விபரம்: 'ஆன்லைனில்' பதிவேற்றம்

 ஜி.பி.எப்., கணக்கு விபரம்: 'ஆன்லைனில்' பதிவேற்றம்


ADDED : மே 27, 2026 07:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2026 07:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 'பொது வருங்கால வைப்பு நிதி, 2025 - 26ம் ஆண்டு வருடாந்திர கணக்கு விபர அறிக்கை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது' என, இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறை, மாநில துணை கணக்காயர் விஜயா தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழக அரசு பணிநிலை சார்ந்த, அனைத்து இந்திய அரசு சேவை அதிகாரிகள், அரசு ஊழியர்கள், ஊராட்சி ஒன்றியம், நகராட்சி தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்.

சென்னை மற்றும் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின், 2025 - 26ம் ஆண்டுக்கான, ஜி.பி.எப்., எனப்படும், பொது வருங்கால வைப்பு நிதி, வருடாந்திர கணக்கு விபர அறிக்கை, தமிழக முதன்மை கணக்காயர் அலுவலகத்தின், https://cag.gov.in/ae/tamil-nadu/en இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளது.

இந்த வலைதளத்தில், தங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்த அனைத்து சந்தாதாரர் களுக்கும், பதிவேற்றம் குறித்த குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us