தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ எடை இயந்திரம் - கைரேகை கருவி இணைப்பு அமல்படுத்த அவகாசம் அளிக்க வலியுறுத்தல்

எடை இயந்திரம் - கைரேகை கருவி இணைப்பு அமல்படுத்த அவகாசம் அளிக்க வலியுறுத்தல்

எடை இயந்திரம் - கைரேகை கருவி இணைப்பு அமல்படுத்த அவகாசம் அளிக்க வலியுறுத்தல்


ADDED : ஜூன் 27, 2025 03:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 27, 2025 03:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:மத்திய உணவு மற்றும் பொது வினியோக திட்டத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை, தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, டில்லியில் நேற்று முன்தினம் சந்தித்தார்.

அப்போது அவர், 'தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 2,670 கோடி ரூபாய் மானிய நிலுவையை, உடனடியாக வழங்க வேண்டும்.

'ரேஷன் கடைகளில் எடைபோடும் இயந்திரத்தை, கைரேகை பதிவு செய்யும் கருவியுடன் இணைத்து பொருட்கள் வழங்குவதால் கார்டுதாரர்களுக்கு ஏற்படும் தாமதத்தை தவிர்க்க, இணைப்பு பணியை அமல்படுத்த, 2026 மார்ச் வரை காலநீட்டிப்பு வழங்க வேண்டும்' என, மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

இது தவிர, தமிழகத்திற்கு இந்திய உணவு கழகம் வழங்கும் அரிசியை, முழுதும் புழுங்கல் அரிசியாக, ஆந்திரா, தெலுங்கானா மாநில தொகுப்பில் இருந்து வழங்க வேண்டும்.

நடப்பு கரிப் பருவ கொள்முதல் அளவை, 16 லட்சம் டன்னில் இருந்து, 19.24 லட்சம் டன்னாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை மனுக்களை, பிரஹலாத் ஜோஷியிடம், சக்கரபாணி வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us