இந்திய பின்னலாடை ஏற்றுமதி அமெரிக்காவின் பங்கு 34 சதவீதம்
இந்திய பின்னலாடை ஏற்றுமதி அமெரிக்காவின் பங்கு 34 சதவீதம்
ADDED : மே 15, 2025 01:25 AM

திருப்பூர்:பிப்ரவரி மாதம் வரை நடந்த, 59,471 கோடி ரூபாய் பின்னலாடை ஏற்றுமதியில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பங்களிப்பு, 63 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், கடந்த நிதியாண்டில், 1.35 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நடந்துள்ளது. இந்தியாவில் இருந்து, கடந்த நிதியாண்டில், பிப்., மாதம் வரை, 59,471 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடை ஏற்றுமதி நடந்து உள்ளது.
அவற்றில், அமெரிக்காவுக்கு மட்டும், 20,497 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்துள்ளது. இது, 34 சதவீதம். அடுத்ததாக, ஐரோப்பிய நாடுகளுக்கு, 17,531 கோடி ரூபாய்க்கு, அதாவது 29 சதவீத ஏற்றுமதி நடந்துள்ளது. இவை இரண்டும் மொத்த ஏற்றுமதியில் மூன்றில் இரண்டு பங்கு வகிக்கின்றன.
மேலும், பிரிட்டனுக்கு, 5,081 கோடி ரூபாய்க்கும்; ஐக்கிய அரபு நாடுகளுக்கு, 4,958 கோடி ரூபாய்க்கும் பின்னலாடை ஏற்றுமதி நடந்துள்ளது.