ADDED : ஆக 21, 2024 02:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில் தொழில் துவங்க வருமாறு, அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்க, முதல்வர் ஸ்டாலின் வரும், 27ம் தேதி அந்நாட்டிற்கு செல்கிறார்.
மின் வாகனம் உள்ளிட்ட துறைகளில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார்.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலினை நேற்று, சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதர் கிறிஸ்டோபர் ஹாட்ஜஸ் சந்தித்து பேசினார்.
இச்சந்திப்பின் போது, தொழில் துறை அமைச்சர் ராஜா, தலைமை செயலர் முருகானந்தம் உடனிருந்தனர்.

