sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஏ.ஐ., பயன்படுத்துங்கள்; பணியை எளிதாக்குங்கள்

/

ஏ.ஐ., பயன்படுத்துங்கள்; பணியை எளிதாக்குங்கள்

ஏ.ஐ., பயன்படுத்துங்கள்; பணியை எளிதாக்குங்கள்

ஏ.ஐ., பயன்படுத்துங்கள்; பணியை எளிதாக்குங்கள்


ADDED : ஏப் 06, 2025 02:56 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 02:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு, மனிதனின் அறிவாற்றலைப் பிரதிபலிக்கும் திறனைப் பெற்ற கணினி அமைப்புகளை உருவாக்குவதாகும். இதில் கற்றல், பகுத்தறிவு, சிக்கலுக்கு தீர்வு, மொழியைப் புரிந்துகொள்ளுதல் போன்ற திறன்கள் அடங்கும். இன்றைய தினம் பல துறைகளில் புரட்சியை ஏற்படுத்தி, மனித வாழ்க்கையை எளிதாக்குகிறது.

ஏ.ஐ., பயன்பாடுகள்


இயந்திரக் கற்றல்: நாம் கொடுக்கும் டேட்டாவிலிருந்து கற்றுக்கொள்ளும் திறனைப் பெற்ற அமைப்புகள்.இயற்கை மொழி செயலாக்கம்: கணினிகள் மனித மொழியைப் புரிந்து கொண்டு, பதிலளிக்கும் திறன்.

பேச்சு அங்கீகாரம்


மனித குரலை கணினிகளால் புரிந்து கொள்ளும் திறன். அதாவது நீங்கள் உதாரணமாக தமிழில் பேசினால் அதை அப்படியே கணினியில் கொண்டு வரும் திறன் கொண்டது. www.dictation.io என்ற பிரபலமான இணையதளத்தில் சென்று பேசிப்பாருங்கள். அப்படியே நீங்கள் பேசுவதை டைப் செய்யும்.

பட அங்கீகாரம் : கணினிகள் படங்களை அடையாளம் காணும் திறன். கூகுள் லென்ஸ் மூலம் எந்த படத்தையும், பொருளையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறதே, அதற்கு இந்த ஏ.ஐ.,தான் பின்புலமாக இருக்கிறது.சுய -ஓட்டுநர் கார்கள்: ஏ.ஐ., மூலம் இயங்கும் கார்கள். உடனடியாக டெஸ்லா கம்பெனியின் டிரைவர் இல்லாத கார்கள் நமக்கு ஞாபகத்திற்கு வரும்.

செயற்கை நுண்ணறிவின் தந்தையாக கருதப்படுபவர் அமெரிக்காவின் ஜான் மெக்கார்த்தி ஆவார்.

சிறந்த ஏ.ஐ., கருவிகள்


ஏ.ஐ., அசிஸ்டென்ட் (Chatbots): ChatGPT, Claude, Gemini, DeepSeek, Grok, Perplexity, CoPilot

வீடியோ உருவாக்கம் மற்றும் எடிட்டிங்: Synthesia, Runway, Filmora, OpusClip

பட உருவாக்கம்: GPT-4o, Midjourney

நோட் மேக்கர் மற்றும் மீட்டிங் அசிஸ்டெண்ட்: Fathom, Nyota

ஆராய்ச்சி: Deep Research

எழுத்து: Rytr, Sudowrite

இலக்கணம் மற்றும் எழுத்து மேம்பாடு: Grammar, Wordtune

சமூக ஊடக மேலாண்மை: Vista Social, FeedHive

கிராபிக் வடிவமைப்பு: Canva Magic Studio, Louka

செயலி (app) பில்டர்கள் & கோடிங்: Bubble, Bolt, Lovable, Cursor, v0

திட்ட மேலாண்மை: Asana, ‎ClickUp

வாடிக்கையாளர் சேவை: Tidio AI, Hiver

வேலைக்கு ஆள்தேர்வு: Textio, CVViZ

அறிவு மேலாண்மை: Notion AI Q&A, Guru

மின்னஞ்சல்: Hubspot Email Writer, SaneBox, Shortwave

பிரசன்டேஷன்: Gamma, Presentations.ai

மார்க்கெட்டிங்: AdCrative

ஆங்கிலம் கற்க / சரிவர எழுத: ludwig.guru

மேலே கொடுத்திருக்கும் ஏ.ஐ., கருவிகளை உபயோகித்து பாருங்கள். அது உங்கள் தினசரி வேலைகளை சுலபமாக்கும்.

ஏ.ஐ., பற்றி கூடுதலாக அறிய இணையதளம்:https://www.elementsofai.com.

இந்தியா.ஏஐ - https://indiaai.gov.in/ - ஏ.ஐ., தொடர்பான செய்திகளை தொகுத்தளிக்கும் இந்திய அரசு இணையதளம்.

உங்கள் சந்தேகங்களுக்கு:

இ- மெயில் Sethuraman.sathappan@gmail.com; அலைபேசி: 98204 51259;

இணையதளம்: www.startupandbusinessnews.com

- சேதுராமன் சாத்தப்பன் -






      Dinamalar
      Follow us