ADDED : ஆக 22, 2025 11:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி:வைகை அணை பகுதிகளில் பெய்த மழை, பெரியாறு அணை நீர் வரத்தால் வைகை அணை நீர்மட்டம் ஆக. 5ல் 69 அடியாக உயர்ந்தது (மொத்த உயரம் 71 அடி).
தொடர்ந்து நீர் வரத்தால் ஆக. 14ல் 69.88 அடியானது. இந்நிலையில் பெரியாறு அணையில் இருந்து வரும் நீரின் அளவும் படிப்படியாக குறைந்தது.
வைகை அணை நீர்மட்டமும் படிப்படியாக குறைந்து நேற்று 69.42 அடியாக இருந்தது.
கடந்த சில நாட்களில் பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு வரும் நீரின் அளவு 750 முதல் 850 கன அடி வரை மட்டுமே உள்ளது. வைகை அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக வினாடிக்கு 969 கன அடி நீர் வெளியேறுகிறது. நீர் வரத்தை விட அணையில் இருந்து வெளியேறும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் குறைகிறது.