தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மின் பிரச்னைக்கு காரணம் தி.மு.க., என்கிறார் வைகோ

மின் பிரச்னைக்கு காரணம் தி.மு.க., என்கிறார் வைகோ

மின் பிரச்னைக்கு காரணம் தி.மு.க., என்கிறார் வைகோ

1


ADDED : அக் 16, 2026 05:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2026 05:35 PM

1


1
Follow on Google
அ நிறம் | அளவு

துாத்துக்குடி: “தமிழகத்தில், தற்போது நிலவும் மின்சார பிரச்னைக்கு தி.மு.க.,வே காரணம்,” என ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நேற்று அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தில், தற்போது ஏற்பட்டுள்ள மின்சார பற்றாக்குறைக்கு, கடந்த ஆட்சியில் சரியாக திட்டமிடாததே காரணம். அதனால் தான், தற்போது மின்சாரத்தை விலைக்கு வாங்கும் நிலைக்கு, தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., ஆட்சியை வீழ்த்தி விட, தி.மு.க., உட்பட எதிர்கட்சியினர் மனப்பால் குடிக்கின்றனர்; அது நடக்காது. எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை, ஆட்சியில் இருந்தபோது, ‘சிறப்பாக இருந்தது’ என கூறிய தி.மு.க., இப்போது எதிர்க்கிறது.

தமிழகத்தில், 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட குளறுபடிக்கு, அன்றைக்கு ஆட்சி பொறுப்பில் இருந்த தி.மு.க., தான் பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us