ADDED : ஜன 09, 2026 02:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: போதையில்லா தமிழகத்தை வலியுறுத்தி நடைபயணம் மேற் கொண்டுள்ள ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, நேற்று மதுரை மாவட்டம் கருங்காலக்குடியில் அளித்த பேட்டி:
அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் ஹிந்துத்துவா சக்திகள் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. வியர்வை, ரத்தம் சிந்தி அண்ணாதுரை, கருணாநிதி கட்டிக் காத்த திராவிட கோட்டை தமிழகம்.
ம.தி.மு.க., சார்பில், ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு என்று தப்பி தவறி ஒரு சொல் கூட பேசியது கிடையாது. நேற்று வரையிலும் இந்த கோரிக்கையை வைக்கவில்லை; இனியும் வைக்க மாட்டோம்.
இவ்வாறு கூறினார்.

