சுற்றுச்சூழல் உணர்திறன் மசோதாவை ரத்து செய்க! வால்பாறையில் வியாபாரிகள் முழு கடையடைப்பு
சுற்றுச்சூழல் உணர்திறன் மசோதாவை ரத்து செய்க! வால்பாறையில் வியாபாரிகள் முழு கடையடைப்பு
ADDED : ஜன 07, 2025 10:13 AM

வால்பாறை: சுற்றுச்சூழல் உணர்திறன் மசோதாவை ரத்து செய்ய கோரி வால்பாறையில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது.
மத்திய அரசின் சுற்றுச்சூழல் உணர்திறன் மசோதா மூலம் வால்பாறை உள்ளிட்ட 183 கிராமங்கள் சமூக, பொருளதார வாழ்வு பாதிக்கப்படும் என்பது அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகளின் குற்றச்சாட்டாகும். வால்பாறையில் முக்கிய சுற்றுலா திட்டங்கள் முடக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.
ஆகையால் இந்த மசோதாவுக்கு வியாபாரிகள் தரப்பினர் கடும் எதிர்ப்பு காட்டி வருகின்றனர். இந் நிலையில், மசோதாவை எதிர்த்து இன்று (ஜன.7) 24 மணிநேர முழு கடையடைப்பு போராட்டத்துக்கு வால்பாறை மக்கள் உரிமை மீட்புக் குழுவினர் அழைப்பு விடுத்து இருந்தனர். அறிவித்தபடி அவர்கள் தங்களது போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
கோரிக்கையை ஏற்று, சுற்றுச்சூழல் உணர்திறன் மசோதாவை ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டக் குழுவினர் வலியுறுத்தி உள்ளனர்.

