தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/வேன் டிரைவர் மர்மச்சாவு மனைவியிடம் ‘கிடுக்கிப்பிடி’

வேன் டிரைவர் மர்மச்சாவு மனைவியிடம் ‘கிடுக்கிப்பிடி’

வேன் டிரைவர் மர்மச்சாவு மனைவியிடம் ‘கிடுக்கிப்பிடி’


ADDED : நவ 15, 2026 07:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2026 07:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேன்கனிக்கோட்டை: தளி அருகே வேன் டிரைவர் மர்மச்சாவில், மனைவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே பேலாளம் கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ், 35, வேன் டிரைவர். இவரின் மனைவி முனிரத்னா, 32; தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த, 13ம் தேதி இரவு வீட்டில் சாப்பிட்டு விட்டு படுத்த மகேஷுக்கு, நேற்று (நவ.,14) காலை வயிற்று வலி ஏற்பட்டது. தளியில் தனியார் கிளீனிக்கில் அனுமதித்தனர். பரிசோதனையில் உடல்நிலை மோசமாக இருக்கவே, மேல் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். உடலை இன்று (நவ.,15) காலை அடக்கம் செய்ய ஏற்பாடு நடந்தது. இதனிடையே சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள், தளி போலீசில் புகார் செய்தனர்.

இதன் அடிப்படையில் அவர் மனைவி முனிரத்னாவிடம், போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த, 13ம் தேதி இரவு மகேஷ் சாப்பிட்ட உணவில் விஷம் வைக்கப்பட்டதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us