'வந்தே பாரத்' ரயில்களில் இனி அரை லிட்டர் குடிநீர்!
'வந்தே பாரத்' ரயில்களில் இனி அரை லிட்டர் குடிநீர்!
UPDATED : பிப் 07, 2024 02:21 AM
ADDED : பிப் 06, 2024 11:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:'வந்தே பாரத்' ரயில்களில், பயணியருக்கு 1 லிட்டர் 'ரயில் நீர்' பாட்டில் இலவசமாக வழங்கப்படுகிறது. எந்த பயணியும் அதை முழுமையாக பயன்படுத்துவதில்லை. பாதி குடித்த நிலையில் மீதி குப்பையில் போடப்படுகின்றன.
குடிநீர் வீணாகுவதை தவிர்க்க, இனி அரை லிட்டர் பாட்டில் வழங்க, ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.
இதற்கான உத்தரவை, அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் அனுப்பி உள்ளது. கூடுதலாக தேவைப்பட்டால், கட்டணம் இன்றி பாட்டில்கள் வழங்கப்படும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

