வி.ஏ.ஓ., அலுவலக சுற்றுச்சுவரை நொறுக்கி தொழிலாளி ரகளை
வி.ஏ.ஓ., அலுவலக சுற்றுச்சுவரை நொறுக்கி தொழிலாளி ரகளை
UPDATED : அக் 14, 2026 09:31 PM
ADDED : அக் 14, 2026 07:18 PM

தஞ்சாவூர்: உரிய ஆவணங்கள் இல்லாமல், வீட்டு மின் இணைப்புக்கான, வருவாய்துறை சான்றிதழ் கேட்டு, வி.ஏ.ஓ., தர மறுத்ததால், வி.ஏ.ஓ., அலுவல சுற்றுசுவரை, சுத்தியால் அடித்து நெறுக்கிய தொழிலாளியை, போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே பசுபதிகோவிலை சேர்ந்தவர் செந்தில்குமார், 40; கூலி தொழிலாளி. இவர் தன் வீட்டிற்கு, மின் இணைப்பு பெற விண்ணப்பித்து இருந்தார். இதற்காக, மின்வாரிய அலுவலகத்தில், வி.ஏ.ஓ., சான்று கேட்டுள்ளனர்.
இந்நிலையில், பசுபதிகோவில் வி.ஏ.ஓ., நவசக்தியிடம், உரிய ஆவணங்கள் இல்லாமல், மின் இணைப்புக்கான அனுமதி பெற, வருவாய்துறை சான்றிதழை செந்தில்குமார் கேட்டுள்ளார். வி.ஏ.ஓ., மறுத்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த செந்தில்குமார் நேற்றுமுன்தினம் மாலை, போதையில் சுத்தியலால், வி.ஏ.ஓ., அலுவல சுற்றுச்சுவரை அடித்து நொறுக்கினார். மேலும், அலுவலகத்தின் இரும்பு கேட்டையும் உடைத்தார்.
வி.ஏ.ஓ., நவசக்தி புகாரில், அய்யம்பேட்டை போலீசார், வழக்கு பதிந்து, செந்தில்குமாரை தேடி வருகின்றனர்.
