ADDED : அக் 19, 2025 01:07 AM
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 'வசந்த் அண்டு கோ' நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் சிறப்பு பம்பர் பரிசுகளை வழங்குகிறது.
'வசந்த் அண்டு கோ' நிறுவனம், பம்பர் பரிசுகள், அதிரடி விலை குறைப்பு, சிறப்பு திட்டங்கள் என, ஒவ்வொரு ஆண்டும் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.
தமிழகம், புதுச்சேரி, பெங்களூரில், 140 கிளைகளுடன் இந்நிறுவனம் செயல்படுகிறது. விரைவில், 141வது கிளையை திறக்கவுள்ளது.
தீபாவளியை ஒட்டி, வசந்த் அண்டு கோ நிறுவனம், வீட்டு உபயோக பொருட்களை வேறு எங்கும் கிடைக்காத விலையில், விற்பனை செய்கிறது. வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் நிச்சயம் பரிசு உண்டு.
வீட்டு உபயோக பொருட்களை, 5,000 ரூபாய்க்கு மேல் வாங்குவோருக்கு, சிறப்பு பம்பர் பரிசாக, கார், பைக், ஸ்கூட்டி, எல்.இ.டி., டிவி, பிரிஜ், வாசிங்மெஷின், மொபைல் போன், கிரைண்டர், மிக்சி, காஸ் ஸ்டவ், ஸ்மார்ட் வாட்ச் என, பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
கூடுதலாக, சிறப்பு நிதி வசதிகளும் ஏற்படுத்தி தரப்படுகின்றன. வீட்டு உபயோக பொருட்களை, 499 ரூபாய் மட்டும் செலுத்தி, மாத தவணையில் வாங்கலாம். கட்டில் வாங்கினால், 999 ரூபாய்க்கு டேபிள் பேன் வாங்கலாம்.
ஒரு ரூபாய் செலுத்தி, கோத்ரெஜ் பர்னிச்சர் எடுத்துச் செல்லலாம்; மீதம் தவணை முறையில் செலுத்தலாம்.