ஆட்சி அதிகாரத்தில் பங்கு த.வெ.க.,விடம் வி.சி., நிபந்தனை
ஆட்சி அதிகாரத்தில் பங்கு த.வெ.க.,விடம் வி.சி., நிபந்தனை
ADDED : மே 09, 2026 05:06 AM

சென்னை: த.வெ.க.,வுக்கு ஆதரவு அளிப்பது குறித்து விவாதிக்க, வி.சி.க., உயர்நிலை கூட்டம், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில், இணையவழியில் நேற்று மாலை நடந்தது.
'த.வெ.க., ஆட்சி அமைக்க ஆதரவு தர வேண்டுமெனில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்க வேண்டும். திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும். திருச்சி கிழக்கு தொகுதியில், திருமாவளவன் போட்டியிட அனுமதிக்க வேண்டும்' என, அந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், வி.சி.க., பொதுச் செயலர் சிந்தனைச்செல்வன் வெளியிட்ட அறிக்கையில், 'தமிழகம் குழம்பிப் போயிருக்கலாம். திருமாவளவன் தெளிந்த நீரோடை. உளிகளை கொண்டு செதுக்க, அவர் வெறும் கல் அல்ல; எழுந்து நிற்கும் இமயமலை. நாளைய பொழுது நமக்காய் விடியும்' என்று தெரிவித்து உள்ளார்.
அதேபோல், துணை பொதுச் செயலர் வன்னி அரசு அறிக்கையில், 'ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு. இது திருமா காலம்;- இனி உயர்வோம் மேலும் மேலும்' என, தெரிவித்துள்ளார்.
