ADDED : ஜூலை 27, 2025 01:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியலுார்:அரியலுார் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்துக்கு, பிரதமர் மோடி வருவதை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளான அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் கொடிகளை கட்டி, வரவேற்பு கொடுத்தனர்.
இந்நிலையில், தி.மு.க., கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிகளும், அங்கு பறக்க விடப்பட்டுள்ளதால், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அக்கட்சி நிர்வாகிகளிடம் கேட்டதற்கு, வி.சி., கட்சித் தலைவர் எம்.பி.,யாக இருப்பதால், எங்கள் கட்சிக் கொடிகளும் கட்டப்பட்டுள்ளன' என்றனர்.