sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மூன்று புதிய மின்விசிறிகள் வி.கார்டு நிறுவனம் அறிமுகம்

/

மூன்று புதிய மின்விசிறிகள் வி.கார்டு நிறுவனம் அறிமுகம்

மூன்று புதிய மின்விசிறிகள் வி.கார்டு நிறுவனம் அறிமுகம்

மூன்று புதிய மின்விசிறிகள் வி.கார்டு நிறுவனம் அறிமுகம்


ADDED : ஆக 02, 2025 02:04 AM

Google News

ADDED : ஆக 02, 2025 02:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'வி.கார்டு இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனம், மூன்று புதிய வகை மின் விசிறிகளை அறிமுகம் செய்துள்ளது.

மின்சாதன பொருட்கள் தயாரிப்பில், முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும், 'வி.கார்டு இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனம், வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும், மின்சாரத்தை சேமிக்கும் வகையிலும், புதிய தயாரிப்புகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில், ஏர்விஸ்லைட், ஏர்விஸ்பிரைம் மற்றும் ஏர்விஸ்பிளஸ் என, மூன்று புதிய ரக மின் விசிறிகளை அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து, வி.கார்டு இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மிதுன் சிட்டிலப்பள்ளி கூறியதாவது:

உயர் செயல்திறன் உடைய சிறப்பான தயாரிப்புகள் வழங்குவதில், எங்கள் நிறுவனம் உறுதியாக இருக்கிறது. அந்த வரிசையில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள, ஏர்விஸ் மின்விசிறிகள், மின்சாரத்தை குறைவாக பயன்படுத்தி அதிக காற்றோற்ற வசதி அளிக்கும் திறன் உடையவை. சிறந்த வடிவமைப்பும், சக்தி வாய்ந்த திறனையும் கொண்டவை.

மின்சாரம் சேமிப்பு குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள நிலையில், எங்களின் புதிய தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

புதிய வகை ஏர்வீஸ் சீரிஸ், தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில், வி.கார்டின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் சில்லரை விற்பனை நிலையங்களில் கிடைக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us