தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஜோதிடத்திற்கு இடம் தரக்கூடாது வி.சி.க., - எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

 ஜோதிடத்திற்கு இடம் தரக்கூடாது வி.சி.க., - எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

 ஜோதிடத்திற்கு இடம் தரக்கூடாது வி.சி.க., - எம்.எல்.ஏ., வலியுறுத்தல்


ADDED : மே 14, 2026 02:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2026 02:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:வி.சி.க., -- எம்.எல்.ஏ., வன்னிஅரசு பேசியதாவது:

கடந்த 2013 முதல் மஹாராஷ்டிரா மாநிலத்திலும், 2020ம் ஆண்டு முதல் கர்நாடகாவிலும், மூடநம்பிக்கையால் ஏமாற்றுபவர்களுக்கு சிறை தண்டனை வழங்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது.

இதேபோன்று, பீஹார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிஷா ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில், மாந்திரிகம், சூனியம் போன்றவற்றை தடுக்கும் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இன்று நாம் அனுபவிக்கும் உரிமைகள், சமூக முன்னேற்றங்கள், பல தலைவர்களின் கள செயல்பாடுகளால், ஈடில்லாத தியாகத்தால் தான் கிடைத்தன.

எனவே, ஜோதிடம், பில்லி சூனியத்திற்கு இடம் தராமல், அறிவியலை வளர்க்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

மஹாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களை போல, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான சட்டத்தை கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us