உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 28, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
சென்னை: தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்துவதை கண்டித்தும், மகளிருக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், சென்னையில் நேற்று, பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், 'தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில், தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்; மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காகத் தென் மாநிலங்களை, குறிப்பாக, தமிழகத்தை தண்டிக்க கூடாது’ என்று, முழக்கங்கள் எழுப்பினர்.
