வாகன சோதனை: தப்பிய டூவீலர் மீது அமரர் ஊர்தி மோதி ஒருவர் பலி
வாகன சோதனை: தப்பிய டூவீலர் மீது அமரர் ஊர்தி மோதி ஒருவர் பலி
ADDED : ஜன 01, 2024 10:36 PM

சங்கரன் கோவில்:தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வாடிகோட்டையை சேர்ந்த கல்குவாரி தொழிலாளர்கள் பத்மநாபன் மற்றும் கார்த்திகேயன் இருவரும் இன்று மாலை டூவீலரில் வாடிக்கோட்டையில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தனர் அப்போது என் ஜி ஓ காலனி அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் . இதனை அறிந்த இருவரும் காவல்துறையினரின் வாகன சோதனையில் இருந்து தப்பிப்பதற்காக டூவீலரை திடீர் என திருப்பினர்.
அப்போது ராஜபாளையத்தில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்த அமரர் ஊர்தி டூ வீலர் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் உயிருக்கு போராடிய அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் அங்கு சிகிச்சை பலனின்றி பத்மநாபன் உயிரிழந்தார் படுகாயமடைந்த கார்த்திக்கிற்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
மேலும் விபத்தில் பலியான பத்மநாபனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் வாடிகோட்டை கிராமத்தைச் சேர்ந்த தனது உறவினர் மகளை திருமணம் செய்ய பேசி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது படுகாயம் அடைந்த கார்த்திக் திருமணம் ஆகி நான்கு மாதங்கள்கடந்த நிலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது மேலும் இச்சம்பவம் குறித்து சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.