தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தேர்தல் பணிக்கு வாகனங்கள் முன்பதிவு; ஓட்டுநர்கள் மகிழ்ச்சி

 தேர்தல் பணிக்கு வாகனங்கள் முன்பதிவு; ஓட்டுநர்கள் மகிழ்ச்சி

 தேர்தல் பணிக்கு வாகனங்கள் முன்பதிவு; ஓட்டுநர்கள் மகிழ்ச்சி


ADDED : மார் 25, 2026 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2026 05:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தேர்தல் நெருங்கும் நேரத்தில், கார்கள், வேன்களுக்கு வழக்கத்தை விட, அதிகமாக முன்பதிவு நடப்பதால், ஓட்டுநர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தல், ஏப்., 23ல் நடக்க உள்ளது. மே 4ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கும். தேர்தல் பணிக்காக, மாநில முழுதும் பறக்கும் படை குழுவினர், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் இதர பிரிவு அலுவலர்களை அழைத்து செல்லும் பணிக்கு, 3,000க்கும் மேற்பட்ட வாடகை கார்கள், வேன்களை, போக்குவரத்து ஆணையரகம் தேர்வு செய்து வருகிறது.

இது குறித்து, ஓட்டுநர்கள் சிலர் கூறியதாவது:

தமிழக தேர்தலையொட்டி, பல்வேறு பணிகளுக்காக, வாடகை கார்கள், வேன்கள் முன்பதிவு செய்யப்படுகின்றன. இது தவிர, அரசியல் கட்சிகளும், தேர்தல் பிரசாரத்திற்கு, வாகனங்களை முன்பதிவு செய்து வருகின்றன. வழக்கமான நாட்களை விட, தேர்தல் நேரத்தில், வாகனங்களுக்கு கூடுதல் முன்பதிவு நடக்கிறது.

இதனால், அடுத்த சில வாரங்களுக்கு வாடகை ஓட்டுநர்களுக்கும், உரிமையாளர்களுக்கும் வழக்கத்தை விட அதிக வருமானம் கிடைக்கும். இது, ஓட்டுநர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us