வேலூரில் அதிகாலை பயங்கரம்! லாரி மீது ஜீப் மோதியதில் 3 பேர் பலி
வேலூரில் அதிகாலை பயங்கரம்! லாரி மீது ஜீப் மோதியதில் 3 பேர் பலி
ADDED : டிச 04, 2024 08:29 AM

வேலூர்; வேலூர் அருகே லாரி மீது ஜீப் மோதியதில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
வேலூர் மாவட்டம் கொணவட்டம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஜீப் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதி வேகத்தில் சென்று கொண்டிருந்த ஜீப் ஒருகட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதியது. பின்னர் அதே வேகத்தில் சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த லாரி மீது திடீரென மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜீப் முற்றிலும் உருக்குலைந்து போனது.
விபத்தில் ஜீப்பில் இருந்த 3 சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தில் பலியானவர்கள் சென்னையை அடுத்த மணலியை சேர்ந்தவர்கள் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.