தேர்தல் கூட்டணி தொடர்பாக நிர்மலாவுடன் வேலுமணி சந்திப்பு
தேர்தல் கூட்டணி தொடர்பாக நிர்மலாவுடன் வேலுமணி சந்திப்பு
ADDED : டிச 19, 2025 07:06 AM

சென்னை: தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் நேற்று டில்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர்.
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்ட ணியில் மேலும் கட்சிகளை சேர்த்து கூட்டணியை வலுவாக்க வேண்டும் என்பதற்காக, இரு தரப்பிலும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த வாரம், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
அதன் பின் அவர் டில்லி சென்று, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து, பழனி சாமியை சந்தித்து பேசிய விபரங்களை தெரிவித்தார்.
அவர்கள் சில ஆலோசனைகளை வழங்கினர். அதன் பின் அவர் சென்னை திரும்பினார்.
அதன் தொடர்ச்சியாக நேற்று, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சண்முகம் ஆகியோர் டில்லி சென்று, நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினர். அப்போது, கூட்டணி தொடர்பாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

