பொங்கலுக்கு முன்பே வேஷ்டி சேலை அமைச்சர் காந்தி உறுதி
பொங்கலுக்கு முன்பே வேஷ்டி சேலை அமைச்சர் காந்தி உறுதி
ADDED : அக் 22, 2024 10:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:''நடப்பாண்டில் பொங்கல் திருவிழாவிற்கு முன்பே, தமழிக மக்களுக்கு இலவச வேஷ்டி சேலைகள் வழங்கப்படும்,'' என, அமைச்சர் காந்தி தெரிவித்தார்.
அவரது பேட்டி:
தமிழகத்தில் முதல் முறையாக, கடந்த ஆண்டு டிச., 31க்குள் வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட்டன. நடப்பாண்டிலும், தமிழகத்தில் உள்ள 1 கோடியே 77 லட்சம் குடும்ப அட்டைதார்களுக்கு, பொங்கல் பண்டிகைக்கு முன்பே, வேஷ்டி, சேலைகள் வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதுவரை 45 லட்சம் வேஷ்டி, சேலைகள் தயாராக உள்ளன. தீபாவளியை ஒட்டி முதியோர் உதவித்தொகை பெறுவோருக்கு வழங்கப்படும், வேஷ்டி, சேலைகள், 100 சதவீதம் தயாராக உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

