திருப்பரங்குன்றம் மலைக்கு உரிமை கோருவதை ஏற்க முடியாது வி.எச்.பி., கருத்து
திருப்பரங்குன்றம் மலைக்கு உரிமை கோருவதை ஏற்க முடியாது வி.எச்.பி., கருத்து
ADDED : பிப் 02, 2025 03:58 AM
மதுரை : 'மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு சட்டவிரோதமாக சில அமைப்புகள் உரிமை கோருவதை ஏற்க முடியாது' என விஸ்வ ஹிந்து பரிஷத்(வி.எச்.பி.,) மாநில செயலாளர் லட்சுமண நாராயணன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
அவர் கூறியதாவது: சமூக நல்லிணக்கத்தை விரும்பாத சிலர், மதமோதல்களை உருவாக்கும் எண்ணத்தில் விரும்பத்தக்காத சில வேலைகளை செய்து வருகின்றனர். சில முஸ்லிம் அமைப்புகள் ஆன்மிக தலமான திருப்பரங்குன்றம் மலையில் மாமிச உணவை உண்ணுவதை பழக்கப்படுத்தவும், ஆடு, கோழிகளை பலியிடுவதையும் வற்புறுத்துகின்றன. இது முருக பக்தர்களையும், ஆன்மிக உணர்வாளர்களையும் புண்படுத்தும் விதமாகவும், மதநம்பிக்கைக்கு எதிராகவும் உள்ளது.
இந்திய நீதிமன்றங்கள், ஆங்கிலேயர் ஆட்சியில் இங்கிலாந்து கவுன்சில் உள்ளிட்ட நீதிமன்ற உத்தரவுகள் நிலுவையில் உள்ள நிலையில் அதற்கு புறம்பாக சட்ட விரோதமாக சில அமைப்புகள் திருப்பரங்குன்றம் மலைக்கு உரிமை கொண்டாடுவதை ஏற்க முடியாது. இவ்வாறு கூறினார்.