ADDED : ஜன 25, 2025 02:16 AM

திண்டுக்கல்:நத்தத்தில் 14 வயது சிறுமியை பாலியல் சில்மிஷம் செய்து வீடியோ எடுத்து உறவினரிடம் பணம் கேட்டு மிரட்டிய கணவன், மனைவிக்கு திண்டுக்கல் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது.
நத்தம் விளாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆண்டி அம்பலம் 40. இவரது மனைவி சீரின் ஜனத் 40.
இவர்களது உறவினரான அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை 2021 ல் ஆண்டி அம்பலம் பாலியல் சில்மிஷம் செய்து அலைபேசியில் வீடியோ எடுத்தார்.
இதை அவரது மனைவி சீரின் ஜனத் சிறுமியின் உறவினர்களிடம் காட்டி பணம் கேட்டு மிரட்டினார்.
நத்தம் போலீசார் கணவன், மனைவியை போக்சோவில் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
இதில் ஆண்டி அம்பலத்திற்கு 15 ஆண்டு சிறை, ரூ.1.15 லட்சம் அபராதம், சீரின் ஜனத்திற்கு 8 ஆண்டு சிறை,ரூ. 60 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார்.