கட்சி தலைவராகிறார் விஜய் :விஜய் மக்கள் இயக்கம் பொதுக்குழுவில் ஒப்புதல்
கட்சி தலைவராகிறார் விஜய் :விஜய் மக்கள் இயக்கம் பொதுக்குழுவில் ஒப்புதல்
ADDED : ஜன 25, 2024 07:58 PM

சென்னை: அரசியல் கட்சி துவங்கவும், கட்சி தலைவராக விஜயை தேர்வு செய்தும் விஜய் மக்கள் இயக்கம் பொதுக்குழுவில்ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து கூறப்படுவதாவது: பனையூரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் அரசியல் கட்சி குறித்து பல்வேறு அறிவுரைகளை நிர்வாகிகளுக்கு விஜய் வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்த ஒரு மாத காலத்திற்குள் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற விஜய் திட்டமிட்டு உள்ளதாக கூறப்பட்டது.
கட்சியின் தலைவர் விஜய்:கூட்டத்தில் முடிவு
இதனிடையே விஜய் மக்கள் இயக்கத்தை முறைப்படி அரசியல் கட்சியாக பதிவு செய்வது எனவும் கட்சியின் தலைவராக விஜய் தொடர்வார் எனவும் பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது. தேர்தல் போட்டி, கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்க விஜய்க்கு அதிகாரம் அளிப்பது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.