sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வடசென்னையில் விஜய் போட்டி? த.வெ.க., ஆதவ் அர்ஜுனா தகவல்

/

வடசென்னையில் விஜய் போட்டி? த.வெ.க., ஆதவ் அர்ஜுனா தகவல்

வடசென்னையில் விஜய் போட்டி? த.வெ.க., ஆதவ் அர்ஜுனா தகவல்

வடசென்னையில் விஜய் போட்டி? த.வெ.க., ஆதவ் அர்ஜுனா தகவல்

13


UPDATED : மார் 09, 2026 05:19 AM

ADDED : மார் 09, 2026 05:18 AM

Google News

13

UPDATED : மார் 09, 2026 05:19 AM ADDED : மார் 09, 2026 05:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: “தி.மு.க., - காங்., கூட்டணி, கல்லாப்பெட்டி கூட்டணி,” என, த.வெ.க., தேர்தல் பிரசார மேலாண்மை குழு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.



த.வெ.க., சார்பில் சென்னையில் நேற்று நடந்த மகளிர் தினவிழாவில் அவர் பேசியதாவது: விஜய், வட சென்னையில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார். வில்லிவாக்கம் அல்லது பெரம்பூர் தொகுதியில் நிற்க வாய்ப்புள்ளது.

தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஒருவரும் சாலையில் நடக்க முடியாது. சிறுமி முதல் பார்க்கும் பெண்களை எல்லாம், தி.மு.க.,வினர் கையை பிடித்து இழுக்கின்றனர். இப்படிப்பட்ட கட்சியை உருவாக்கி விட்டு, முதல்வர் ஸ்டாலின் தினமும் கண்மூடி செல்கிறார்.

தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் கட்சி கையெழுத்திட்டதும் தைரியம் வந்துவிட்டது போல் இருக்கின்றனர். அது மதசார்பற்ற கூட்டணி இல்லை; கல்லாப்பெட்டி கூட்டணி.

தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தால், நல்ல கட்சியாக இருக்கும். ஆளும் கட்சியாக வந்து விட்டால், கண்ணில் பார்ப்பதை எல்லாம் அடைய வேண்டும் என நினைக்கும். மத்திய அரசு விதிப்பது ஜி.எஸ்.டி., என்றால், தமிழகத்தில் ஸ்டாலின் சார் 'டேக்ஸ்', அதாவது எஸ்.எஸ்.டி.,

தேர்தல் அறிவிப்புக்கு பின், விஜய் தெருத்தெருவாக செல்லும்போது, மக்களின் எழுச்சியை பார்க்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us