ADDED : அக் 09, 2025 01:42 AM

சென்னை: 'த.வெ.க., தலைவர் விஜய், கரூரில் பாதிக்கப்பட்டோரை சந்தித்து ஆறுதல் கூற உள்ளதால், அதற்கான அனுமதியும், விஜய்க்கு பாதுகாப்பும் அளிக்க வேண்டும்' என, டி.ஜி.பி., அலுவலகத்தில், அக்கட்சியினர் மனு அளித்துள்ளனர்.
இது தொடர்பாக, சென்னை டி.ஜி.பி., அலுவலத்தில், த.வெ.க., வழக்கறிஞர் அறிவழகன் நேற்று மனு அளித்தார்.
த.வெ.க., அளித்த மனுவுக்கு, டி.ஜி.பி., அலுவலகம் அளித்த பதிலில், 'கரூரில் விஜயின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு தொடர்பாக, த.வெ.க., பிரதிநிதி ஒருவரை நியமித்து, கரூர் எஸ்.பி.,யை தொடர்பு கொள்ளவும்.
'நிகழ்ச்சிக்கான தேதி, நேரம், இடம், வரும் வழி, நிகழ்ச்சி நிரல் விபரங்களை, கரூர் மாவட்ட காவல் துறையிடம் அளிக்கவும்.
'அதன்பிறகு, நிகழ்ச்சிக்கு தேவையான பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என கூறப் பட்டுள்ளது.