sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டில்லி புறப்பட்டார் விஜய்

/

சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டில்லி புறப்பட்டார் விஜய்

சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டில்லி புறப்பட்டார் விஜய்

சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டில்லி புறப்பட்டார் விஜய்

1


UPDATED : மார் 14, 2026 05:12 PM

ADDED : மார் 14, 2026 05:02 PM

Google News

1

UPDATED : மார் 14, 2026 05:12 PM ADDED : மார் 14, 2026 05:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்காக தவெக தலைவர் விஜய் டில்லி புறப்பட்டு சென்றார்.

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுவரையில் சுமார் 200க்கும் மேற்பட்ட சாட்சியங்களை விசாரித்துள்ளது. விஜய் பயன்படுத்திய பிரசார வாகனத்தையும் ஆய்வு செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜயிடம் இரு முறை சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. அதேபோல, தவெக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, விஜயிடம் 3வது முறையாக விசாரணை நடத்த சிபிஐ சம்மன் அனுப்பியது. சென்னையில் ஆஜராக விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதனை சிபிஐ நிராகரித்தது.

இந்த நிலையில், அவர் இன்று பிற்பகல் சென்னையில் இருந்து விமானம் மூலம் டில்லி புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு இரவு நட்சத்திர ஓட்டலில் தங்கும் அவர், நாளை சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜராக இருக்கிறார்.

வரும் சட்டசபை தேர்தலில் விஜயின் தவெக, என்டிஏவுடன் கூட்டணி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவரது இந்த டில்லி பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கத்தரிக்கோலால் தாமதம்

சோதனையின் போது, விஜயின் கைப்பையில் கத்தரிக்கோல் இருந்ததால், சுமார் 20 நிமிடம் தாமதமாக விமானம் புறப்பட்டு சென்றது. விஜய் அந்தக் கத்தரிக்கோலை தனது உதவியாளரிடம் கொடுத்த பின்பே, விமானம் கிளம்பியது.








      Dinamalar
      Follow us