தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ விஜய் விவாகரத்து வழக்கு விசாரணை நீதிபதி மாற்றம்

 விஜய் விவாகரத்து வழக்கு விசாரணை நீதிபதி மாற்றம்

 விஜய் விவாகரத்து வழக்கு விசாரணை நீதிபதி மாற்றம்


ADDED : மே 01, 2026 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2026 01:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: த.வெ.க., தலைவர் விஜய் விவாகரத்து வழக்கு, முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், எம்.பி., ஆ.ராஜா மற்றும் எம்.பி., தயாநிதி மாறன் ஆகியோர் மீதான வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதிகள், இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழகம் முழுதும், மாவட்டம் மற்றும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள், 95க்கும் மேற்பட்டோரை பணியிட மாற்றம் செய்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் எஸ்.அல்லி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதன்படி, அ.தி.மு.க., - தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.,க்கள் மீதான சொத்து குவிப்பு வழக்குகள் மற்றும் மோசடி தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் சி.சஞ்சய்பாபா, என்.வேங்கடவரதன் மற்றும் த.வெ.க., தலைவர் விஜய் விவாகரத்து வழக்கை விசாரித்து வரும், செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சசிகலா ஆகியோரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us