வெற்றியை நிர்ணயிக்கும் அளவுக்கு விஜய்க்கு ரசிகர் பட்டாளம் இல்லை
வெற்றியை நிர்ணயிக்கும் அளவுக்கு விஜய்க்கு ரசிகர் பட்டாளம் இல்லை
ADDED : பிப் 12, 2025 10:32 PM

வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் த.வெ.க., உடன் இணைந்துள்ளதால் தி.மு.க., வெற்றி பாதிக்காது. கடந்த சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.,வுக்காக அவர் பணியாற்றினார். ஆனால், அவரால் மட்டுமே வெற்றி கிட்டவில்லை. தி.மு.க., மீது நம்பிக்கை வைத்து மக்கள் ஓட்டளித்ததால் வெற்றி பெற்றோம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 75 சதவீத ஓட்டுக்களுக்கு மேல் பெற்றுள்ளோம். அதே வெற்றி, வரும் சட்டசபைத் தேர்தலிலும் தொடரும்.
விஜய் சினிமா நடிகர், அவருக்கு ரசிகர்கள் உள்ளனர். மக்கள் தற்போது சினிமாவை அரசியலோடு கலப்பதில்லை. எனவே இளைஞர்கள், படித்தவர்கள் த.வெ.க.,விற்கு ஓட்டளிக்க தயாராக இல்லை. வெற்றியை நிர்ணயிக்கும் அளவிற்கு, அவருக்கு ரசிகர் பட்டாளம் இல்லை. சட்டசபை தேர்தலில் 4 அல்லது 5 முனை போட்டி இருக்கும். அதில், ஈரோடு கிழக்கைப் போல், தி.மு.க., கூட்டணி மட்டும் 75 சதவீத ஓட்டு வாங்கினால், மற்றவர் டிபாசிட் இழப்பர்.
பெரியசாமி, தமிழக அமைச்சர்

