தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 'விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை'

'விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை'

'விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை'


ADDED : நவ 02, 2024 06:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 02, 2024 06:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:''நடிகர் விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை,'' என, தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது:

புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களிலும், ஏன் உலகளவில் எந்த நாட்டிலும் கூட கள் விற்பனைக்கு தடையில்லை. ஆனால், தமிழகத்தில் மட்டும் அத்தகைய ஒரு நிலையை ஏற்படுத்தி உள்ளனர். தமிழகத்தில் வெற்றி பெற்ற, 39 எம்.பி.,க்களும், அரசியல் சாசன சட்ட புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு தான் பதவி ஏற்றுக் கொண்டனர். அதில், 47வது பிரிவில் கள் ஒரு உணவு பொருள் என்று சொல்லி இருக்கிறது. இதை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை.

கள் தடை செய்யப்பட வேண்டிய போதை பொருள் தான் என, அவர்கள் எங்களிடம் உரிய தயாரிப்புகளுடன் வாதாட வரட்டும். நியாயமான வாதங்களை வைத்து, வெற்றி பெற்று விட்டால், அவர்களுக்கு, 10 கோடி ரூபாய் பரிசு தருகிறேன். 2025 ஜன., 21ல், கள் இறக்கி சந்தைப்படுத்தும் கள் விடுதலை போராட்டம் நடத்தப்படும்.

யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தையும், பாடலையும் பாடியவர் விஜய். அவருக்கு அரசியல் குறித்த எவ்வித புரிதலும் இல்லை.

இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us