ADDED : செப் 08, 2025 02:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சட்டசபை தேர்தலில், தி.மு.க., 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். தென் மாவட்டங்களில், தற்போது, அ.தி.மு.க.,விடம், 27 தொகுதிகள் உள்ளன.
வரும் தேர்தலில், ஏழு தொகுதிகளில் தான் வெற்றி பெறுவர். அ.தி.மு.க., ஒரு கட்சியே கிடையாது.
எம்.ஜி.ஆர்., 30 ஆண்டுகள் தி.மு.க.,வில் இருந்தார். அதனால், அரசியலில் அவர் வெற்றி பெற்றார். நடிகர் விஜய், திடீரென அரசியலுக்கு வந்து ஒன்றும் செய்ய முடியாது.
மாநாட்டுக்கு லட்சக்கணக்கில் கூடுபவர்கள் எல்லாம், ஓட்டுப்போட தெரியாத சின்ன பசங்க; 10, 12, 13 வயதில் சினிமா பார்க்கிறவர்களை எல்லாம் யாரும் பெரிதாக கண்டு கொள்ளக் கூடாது.
- ராஜகண்ணப்பன், தமிழக அமைச்சர், தி.மு.க.,