உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 10, 2026 12:22 AM

அ நிறம் | அளவு
தமிழகத்தில் இதுவரை இருந்த தி.மு.க., அரசு மக்கள் விரோத அரசாக இருந்தது. சட்டம் - ஒழுங்கு மிக மோசமாக இருந்ததுடன், போதைப் பொருட்கள், கஞ்சா பெருகியிருந்தது. அதன் விளைவு தான், தி.மு.க., அரசு தோல்வி அடையக் காரணம். ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் தமிழக வெற்றிக் கழக தலைவர் ஜெயித்துள்ளார்.
இது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றம். புதிய அரசு, விவசாயிகளுக்கான திட்டங்களை நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கடன் இல்லாத ஆட்சி, மக்களுக்கு நல்ல திட்டங்களை தருவது எப்படி என்பதை புதிய அரசு யோசிக்க வேண்டும். மதசார்பற்ற முறையில், விஜய் நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறோம். விஜய் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்து மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். அதை அவர் காப்பாற்றி, ஆட்சியை நன்றாக நடத்த வேண்டும் என்பதே ஹிந்து முன்னணியின் எதிர்பார்ப்பு. - காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைவர், ஹிந்து முன்னணி
