இன்று விஜய் கட்சி மாநாடு; விக்கிரவாண்டியில் வானிலை நிலவரம் எப்படி? இதோ முழு விபரம்!
இன்று விஜய் கட்சி மாநாடு; விக்கிரவாண்டியில் வானிலை நிலவரம் எப்படி? இதோ முழு விபரம்!
ADDED : அக் 27, 2024 12:16 PM
முழு விபரம்

சென்னை: விஜய் கட்சி முதல் நடக்கும் இன்று (அக்.,27) நடக்கும் விக்கிரவாண்டியில் வானிலை நிலவரம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி உள்ள நடிகர் விஜய், கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று (அக்.,27) நடத்துகிறார். தற்போதே மாநாட்டு திடலில், தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். வெயில் காரணமாக 100க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாநாடு நடக்கும் விக்கிரவாண்டியில் இன்று மதியம் வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்து தகவல் பின்வருமாறு:
* விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில், வறண்ட காற்று நிலவுகிறது. அங்கு மழை பெய்வதற்கு பெரும் அளவுக்கு வாய்ப்பு கிடையாது.
* மதியம் 2 மணி முதல் 4 மணி வரை 33 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவும். இது குறைந்த வெப்பநிலை தான்.
* இதனால் மாநாடு நடக்கும் விக்கிரவாண்டியில் இன்று மாலை மழைக்கு வாய்ப்பில்லை என வானிலை நிலவரங்கள் தகவல் வெளியாகி உள்ளது.