ADDED : அக் 16, 2025 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் த.வெ.க., நிர்வாகிகளுக்கு ஜாமின் வழங்கி, கரூர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை கூடலுாரில் பதுங்கியிருந்த கரூர் மேற்கு மாவட்ட செயலர் மதியழகன், அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக, கரூர் மாநகர த.வெ.க., பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோரை, கரூர் டவுன் போலீசார் கடந்த, 30ல் கைது செய்து, கரூர் ஜே.எம்., - 1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவர்கள் ஜாமின் வழங்க கோரி, மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பரத்குமார், வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டு விட்டதால், மதியழகன், பவுன்ராஜ் ஆகியோருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.