சொத்து விபரத்தை குறைத்து கண்பித்த விஜய்க்கு கண்டிப்பு
சொத்து விபரத்தை குறைத்து கண்பித்த விஜய்க்கு கண்டிப்பு
ADDED : ஏப் 21, 2026 01:41 AM
சென்னை: 'இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த, த.வெ.க., தலைவர் விஜய், ஒரு தொகுதியில் 100 கோடி ரூபாய் அளவிலான சொத்து விபரங்களை, குறைத்து காண்பித்தது முறைகேடானது' என, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
'தமிழக சட்டசபை தேர்தலில், த.வெ.க., தலைவர் விஜய், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இரு தொகுதிகளில் விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுக்களில், முன்னுக்கு பின் முரணான தகவல்கள் இடம்பெற்று உள்ளன.
'எனவே வேட்பு மனுக்களில், விஜய் தெரிவித்துள்ள சொத்து விபரங்கள் முழுமையானவையா, உண்மையானவையா என, வருமான வரித்துறை மற்றும் தேர்தல் கமிஷன் விசாரிக்க வேண்டும்' எனக் கோரி, பெரம்பூர் தொகுதி வாக்காளர் விக்னேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இந்த மனு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தவர், ஒரு தொகுதியில், 100 கோடி ரூபாய் வரை குறைத்து காட்டியது முறைகேடானது' என, தெரிவித்த நீதிபதிகள், மனு தொடர்பாக வருமானவரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 3ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
