sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முதல்வர் வேட்பாளராக விஜய் தேர்வு; த.வெ.க., செயற்குழுவில் அறிவிப்பு

/

முதல்வர் வேட்பாளராக விஜய் தேர்வு; த.வெ.க., செயற்குழுவில் அறிவிப்பு

முதல்வர் வேட்பாளராக விஜய் தேர்வு; த.வெ.க., செயற்குழுவில் அறிவிப்பு

முதல்வர் வேட்பாளராக விஜய் தேர்வு; த.வெ.க., செயற்குழுவில் அறிவிப்பு

41


UPDATED : ஜூலை 04, 2025 02:32 PM

ADDED : ஜூலை 04, 2025 01:53 PM

Google News

UPDATED : ஜூலை 04, 2025 02:32 PM ADDED : ஜூலை 04, 2025 01:53 PM

41


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: த.வெ.க., முதல்வர் வேட்பாளராக விஜயை தேர்வு செய்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

சென்னை, பனைவூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் அக்கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடந்தது. இதில், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

* கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்கான அதிகாரத்தை விஜய்க்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாட்டை நடத்த தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. திருச்சி அல்லது மதுரையில் 2வது மாநில மாநாட்டை நடத்த செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

* ஜூலை 2வது வாரத்தில் உறுப்பினர்கள் சேர்க்கையை தொடங்க தீர்மானம்.

* செப்டம்பர் முதல் டிசம்பவர் வரை விஜய் மக்கள் சந்திக்கிறார்.

* த.வெ.க.,விற்கு எதிராக கபட நாடகம் ஆடும் தி.மு.க., அரசின் அராஜக போக்கிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

* கச்சத்தீவை குத்தகைக்கு கேட்டு பெற வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம்.

* மாநில சுயாட்சி, சட்டம் ஒழுங்கை காக்க தவறிய தமிழக உள்துறை அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.

* த.வெ.க., முதல்வர் வேட்பாளராக விஜயை தேர்வு செய்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. த.வெ.க., அறிவிப்பால், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மும்முனை போட்டி உறுதி ஆகி உள்ளது.

கூட்டணி இல்லை


த.வெ.க., செயற்குழு கூட்டத்தில் விஜய் பேசியதாவது: கொள்ளை எதிரிகள், பிளவுவாத சக்திகள் உடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் கூட்டணி இல்லை. மலிவான அரசியல் ஆதாயத்திற்கு மக்களை பிளவுபடுத்தி குளிர்காய பா.ஜ., நினைக்கிறது. அவர்களின் இந்த விஷமதனமான வேலைகள் எங்கு வேண்டுமானாலும் எடுபடலாம். ஆனால் தமிழகத்தில் ஒரு போதும் எடுபடாது.

சமூக நீதியும், சகோரத்துவமும் ஆழமான வேரூன்றிய மண் தமிழகம். தமிழகத்தின் மதிப்பிற்குரிய தலைவர்களை வைத்து பா.ஜ., அரசியல் செய்தால் ஒருபோதும் வெற்றி பெற இயலாது. சுயநல அரசியல நலனுக்காக கூடி குழைந்து கூட்டணி போக தி.மு.க.,வோ, அ.தி.மு.க.,வோ இல்லை த.வெ.க.,

உறுதியான தீர்மானம்

கூட்டணி என்றாலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமையும். தி.மு.க., மற்றும் பா.ஜ.,விற்கு எதிராக கூட்டணி இருக்கும். அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதையும் உறுதிபட செயற்குழு வாயிலாக தெரிவிக்க விரும்புகிறேன். இது இறுதியான தீர்மானம் மட்டுமல்ல. உறுதியான தீர்மானம்.

விவசாயிகளுக்கு ஆதரவு


நமது விவசாயிகளுக்காக நாம் உறுதியாக நிற்க வேண்டியது நமது கடமை. நாம் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்போம். பரந்தூர் மக்களை ஏன் சந்திக்கவில்லை என்றால் முதல்வர் ஸ்டாலினிடம் பதில் இல்லை. எதிர்க்கட்சியாக இருந்தால் மட்டும் தான் மக்கள் பற்றி அக்கறை இருக்குமா? பரந்தூர் மக்களை முதல்வர் ஸ்டாலின் சந்திக்க வேண்டும்.

பரந்தூர் விமான நிலையம்

நூற்றுக்கணக்கான விவசாய நிலங்களை அழித்து விட்டு, மிக பெரிய நீர்நிலைகள் உள்ளிட்டவற்றை அழித்து விட்டு, அந்த இடத்தில் தான் விமான நிலையம் கட்டி ஆக வேண்டும் என்று என்ன அவசியம் இருக்கிறது. நீங்கள் ஏன் மக்களின் முதல்வர் என்று நாகூசாமல் சொல்கிறீங்க. உங்களுக்கும், பரந்தூர் விமான நிலையத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்கிறீர்கள். 1500 குடும்பங்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு சாதாரணமாக தெரிகிறதா? இவ்வாறு விஜய் பேசினார்.






      Dinamalar
      Follow us