ADDED : ஜூன் 06, 2025 06:07 AM
நடிப்பில் பல கோடி ரூபாய் சம்பாதித்துவிட்டு, திடுமென அரசியலுக்கு வருவேன் என்பதும், எடுத்ததும் கோட்டைக்குத்தான் போவேன் என்பதும், நினைத்த மாத்திரத்தில் முதல்வராக ஆசைப்படுவதும் விமர்சனத்துக்குரியது. அதனால் தான் நடிகர் விஜயை விமர்சித்தேன்.
திரைத் துறையில் வசனம் பேசியதால் மட்டும், அதையே மூலதனமாக வைத்து ஆட்சி அதிகாரத்துக்கு வரத் துடித்தால், காலம் காலமாக மக்களோடு மக்களாக நின்று அரசியல் செய்பவர்களெல்லாம் முட்டாள்களா? அதனால் தான், மக்கள், கலையை கலையாகவும், நடிகரை நடிகராக மட்டுமே பார்க்க வேண்டும் என கூறினேன். பொது வெளியில் அநாகரிமாக நடப்பதையும் விமர்சித்தேன்.
இதற்காக, த.வெ.க.,வினர் என்னை தாறுமாறாக விமர்சிக்கின்றனர். இதை, நடிகர் விஜய் தான் தடுக்க வேண்டும். இல்லையென்றால், அது அவர்களுக்குத்தான் ஆபத்தாக முடியும்.
- வேல்முருகன்,
தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி