ADDED : மார் 10, 2026 02:10 AM

சென்னை: 'கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, டில்லி சி.பி.ஐ., அலுவலகத்தில் இன்று ஆஜராக வேண்டும்' என, த.வெ.க., தலைவர் விஜய்க்கு 'சம்மன்' அனுப்பப்பட்டுள்ளது.
கடந்தாண்டு செப்., 27ல், கரூரில் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக, ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டு, டில்லியில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்தில், கடந்த ஜன., 12 மற்றும் 19ம் தேதிகளில் விஜயிடம் விசாரணை நடந்தது.
இந்நிலையில், இன்று காலை விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜய்க்கு சி.பி.ஐ., அதிகாரிகள் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர்.
எனினும், 'தேர்தல் பணிகள் காரணமாக, 15 நாட்கள் விலக்கு அளிக்க வேண்டும். சென்னையில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்தில் ஆஜராக அனுமதி தர வேண்டும்' என, சி.பி.ஐ., தலைமை அலுவலகத்திற்கு விஜய் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
