பதவியேற்கும் வரை பார்ப்பதை தவிர்த்த விஜய், உதயநிதி
பதவியேற்கும் வரை பார்ப்பதை தவிர்த்த விஜய், உதயநிதி
ADDED : மே 11, 2026 07:30 PM

சென்னை: எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி முடியும் வரை, அவையில் முதல்வர் விஜய்யும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதை தவிர்த்தனர்.
அதிமுக - திமுகவை வீழ்த்தி, தவெக ஆட்சியை பிடித்துள்ளது. முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவி ஏற்றார். எதிர்க்கட்சி தலைவராக, திமுக எம்எல்ஏ உதயநிதி தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக, அக்கட்சி சார்பில், சட்டசபை செயலகத்தில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்டசபையில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் இருக்கையில் விஜய் அமர்ந்தார். எதிர்க்கட்சி தலைவர் இடத்தில் உதயநிதி அமர்ந்தார். ஆனால், இருவரும் வணக்கம் கூட வைத்துக் கொள்ளவில்லை.
பதவி ஏற்பு முடியும் வரை, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதையும் தவிர்த்து விட்டனர். இறுதியாக, இருவரும் சபையில் இருந்து வெளியேற எழுந்தபோது, பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர்.
