ADDED : டிச 27, 2025 07:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: ''த.வெ.க.,தலைவர் விஜய், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரவேண்டும்.
இல்லாவிட்டால் அரசியலில் கமலை விட மோசமான நிலைக்கு தள்ளப் படுவார்,''என்று பா.ஜ.,சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் வேலுார் இப்ராஹிம் கூறினார்.
கோவையில் வேலுார் இப்ராஹிம் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். தி.மு.க. தோற்கடிக்கப்படும்.
நடிகர் விஜய் ஓட்டுக்களை பிரிக்க அரசியல் களத்தை பயன்படுத்த கூடாது. அவர் பா.ஜ.,கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரவேண்டும். இல்லாவிட்டால் அரசியலில் கமலை விட மோசமான நிலைக்கு தள்ளப் படுவார். இவ்வாறு அவர் கூறினார்.

