ADDED : ஜன 15, 2026 02:40 AM

நடிகர் விஜய், சி.பி.ஐ., விசாரணைக்கும்; விமான பயணத்துக்கும் மட்டுமே குறித்த நேரத்தில் செல்கிறார். கரூரில் நடந்த கூட்டத்துக்கு, அவர் தாமதமாக சென்றதாலேயே, அங்கு பெரிய சோகம் ஏற்பட்டது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுடன் இருந்து அரசியல் செய்த செங்கோட்டையன், தன் கோபி சட்டசபை தொகுதியில், த.வெ.க., சார்பில் போட்டியிடப் போகிறார். ஆனால், அவர் அங்கு வெற்றி பெறுவது சிரமம்; அதே போல, அ.தி.மு.க.,வும் வெற்றி பெறாது.
தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு 3 சதவீத ஓட்டு மட்டுமே உள்ளது. அண்ணாமலை கூறுவது போல், 11 சதவீதமெல்லாம் கிடையாது. தி.மு.க., அரசால், ஒரு குடும்பத்துக்கு மாதந்தோறும் சில ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது.
வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்காக பிரசாரம் செய்ய உள்ளேன். அரசியலில் தோல்வி அடையப் போகும் விஜய், வரும் ஜூனில் இருந்து மீண்டும் படங்களில் நடிப்பார்.
- எஸ்.வி.சேகர், நடிகர்
