தேர்தலை சந்தித்ததும் விஜய்க்கு யதார்த்த அரசியல் புரியும்
தேர்தலை சந்தித்ததும் விஜய்க்கு யதார்த்த அரசியல் புரியும்
ADDED : ஏப் 16, 2025 09:01 PM
தமிழக பா.ஜ.,வின் மையக்குழு கூடி, மாநில தலைவராக நயினார் நாகேந்திரனை தேர்வு செய்தது. மாநிலத் தலைவராக வேறு ஒருவர் போட்டியிடக் கூடாது என யாருக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை.
தி.மு.க.,வை அப்புறப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான் நயினார் நாகேந்திரனும் கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலையும் செயல்படுகின்றனர். கூட்டணியில் இல்லாத போதும், பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., நட்புடன்தான் இருந்தது.
வரும் நாட்களில் தி.மு.க.,வில் இருந்து வெளி வரும் கட்சிகள், தே.ஜ., கூட்டணியில் இணையும்.
த.வெ.க., தலைவர் விஜயின் அரசியல், பா.ஜ., - - அ.தி.மு.க., கூட்டணிக்கு தான் சாதகம். தி.மு.க., கூட்டணியில் உள்ள சிறுபான்மையின ஓட்டுக்களை விஜய் பிரிப்பார். அவர், தே.ஜ., கூட்டணி ஓட்டுக்களை பிரிக்க மாட்டார்.
விஜய் 2026 சட்டசபைத் தேர்தலை சந்திப்பார். அதன்பின், தமிழகத்தின் யதார்த்த அரசியலை புரிந்து கொள்வார்.
ராம சீனிவாசன், பொதுச்செயலர், தமிழக பா.ஜ.,