தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் ‘சம்மன்’

விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் ‘சம்மன்’

விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் ‘சம்மன்’


UPDATED : நவ 15, 2026 07:17 PM

ADDED : நவ 15, 2026 07:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 07:17 PM ADDED : நவ 15, 2026 07:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

போஸ்டர் செய்தி

சென்னை: ‘சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராக வேண்டும்’ என, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் ‘சம்மன்’ அனுப்பி உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரைச் சேர்ந்தவர் டாக்டர் விஜயபாஸ்கர், 52. இவர் கடந்த, 2016 – 2021ம் ஆண்டில், அ.தி.மு.க., ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். வருமானத்திற்கு அதிகமாக, 35.79 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

அதன் அடிப்படையில், அவர் சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக, ஈ.டி., எனும் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. இவ்வழக்கு தொடர்பாக, கடந்த 6ம் தேதி, சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக, ‘சம்மன்’ அனுப்பி இருந்தனர்; அன்று அவர் ஆஜராகவில்லை. அதனால் வரும், 18ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, மீண்டும் ‘சம்மன்’ அனுப்பி உள்ளனர்.

இவர் தற்போது த.வெ.க.,வில் சேர்ந்து, அக்கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயலராக உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us